Showing posts with label thamizh. Show all posts
Showing posts with label thamizh. Show all posts

என்னடி முனியம்மா - ஒரு அபிமான கிராமிய பாடல்

Monday, June 16, 2008

0 comments  












முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் -நீ
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி
யாரு வெச்ச மைய்யி - இது நான் வெச்ச மைய்யி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.

மாடு ரெண்டும் மதுர வெள்ள மணிக ரெண்டும் தஞ்சாவூரு (2)
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலபாத பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

குத்தாலம் அருவியில குளிச்சாலும் அடங்காது (2)
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா - நீ
அருகில் வந்தால் சிலு சிலுக்கும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

பச்சரிசி பள்ளழகி பால் போலும் சொல்லழகி
பச்சரிசி பள்ளழகி - பசும் பால் போலும் சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா - நீ
சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வெச்சி
இடுப்புல சொருகுறியே கண்ணம்மா - அது
கொசுவமல்ல என் மனசு கண்ணம்மா

(என்னடி முனியம்மா...)

ஏறிக்கற ஓரத்துல ஏத்தம் எரக்கயில (2)
இங்கிருந்து பாக்கயில கண்ணம்மா - நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

மழையில நனயும் போது மாந்தோப்பில் ஒதுங்கும் போது (2)
மெல்ல அணைக்கும் போது பொன்னம்மா - உன்
மேனி நடுங்கலமோ பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல லவுக்க துணி (2)
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா

கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா - இனி
நான்தாண்டி உன் புருஷன் பொன்னம்மா

(என்னடி முனியம்மா...)

கவிஞன் யானோர் காலக் கணிதம்

Wednesday, February 20, 2008

7 comments  

கல்லூரியில் படித்து, வியந்து ரசித்த ஒரு கண்ணதாசன் கவிதை.








கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!


வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


- கவிஞர் கண்ணதாசன்