சார் ஒரு சந்தேகம்...

Sunday, February 24, 2008

0 comments  



















From: http://www.keetru.com/jokes/jokes/31.php
--------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்: என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?
--------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவையையும் தாண்டி யோசிக்க வேண்டிய விஷயம் இது!!!

கவிஞன் யானோர் காலக் கணிதம்

Wednesday, February 20, 2008

6 comments  

கல்லூரியில் படித்து, வியந்து ரசித்த ஒரு கண்ணதாசன் கவிதை.








கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!


வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்

கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!


- கவிஞர் கண்ணதாசன்

சாலை விளக்கு

Friday, February 8, 2008

3 comments  

வெள்ளிக்கிழமை அந்தி நேரம்.
அலுவல் முடித்து அமைதியான சாலையில்.

ஆயிரம் நினைவுகளை அசைபோட்டு
காலாற நடந்து வந்தேன்.

அங்கிருந்த பூங்கா ஒன்றில் காதலிலே தமை மறந்து
கண்மூடி திலைத்திருந்தனர் காதலர் இருவர்.

ஏதோ ஒன்று நினைவை தொட
என் உதடுகளில் சிறு புன்னகை.

காட்டில் வாழ்ந்த மனிதன் போல
கண்ட இடத்தில் காதலிக்கும் மக்கள்.

தவறொன்றும் இல்லை!
இது இவர்கள் கலாச்சாரம்!

சற்று தூரம் நடந்து வந்து சாலை கடக்க நின்றிருந்தேன்.
எனக்கெதிரே அந்தப்பக்கம் பெண்ணொருத்தி வந்து நின்றாள்.

அந்தியில் மலர்ந்த பூ போல அத்தனை பொலிவு அவள் முகத்தில்.
ஆடை என்ன, அணிகள் என்ன, அம்பு தொடுக்கும் விழிகள் என்ன!

நரேந்திரனே வியந்த பெண்கள்!
நான் வியந்ததில் வியப்பென்ன?

காத்திருந்த விளக்கெரிய சாலை கடக்க முற்பட்டேன்.
கன்னி மட்டும் நகரவில்லை, கண்கள் அவையும் திரும்பவில்லை!

புன்னகை செய்தாள் பூங்கொடியாள்! - அமெரிக்கர் வழக்கம் என்பதினால்
பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்!

கண்கள் பிரியும் முன்னே, புன்னகை சற்றும் குறையாமல்
செவ்விதழ்கள் விரித்து கேட்டாள் "ஹே! டூ யு வான ஹேங் அவுட்?!"

நண்பன் சொன்ன வேசியினை
இன்றே கண்டேன் முதல் முறையாய்!!