கொல்லும் குளிர் குறைந்து
இன்னும் ஒரு வசந்த காலம்
பருவம் வந்த பெண் போல
தினம் புதுமலர்கள் தாங்கும் மரங்கள்
இதமான சிலுசிலு காற்று
இடைவிடாமல் பறவைகள் பாட்டு
காலம் மாற கோலத்தில் எத்தனை மாற்றம்.
மனிதர்கள் வாழ்விலும் காலங்கள் உண்டா?
எண்ணிப்பார்க்கிறேன்!
வசந்தமே காணாமல் வறுமையில் துவண்டு
வீழ்ந்த தளிர்கள் எத்தனை?
வாழ்வெல்லாம் போராடி
சாகும் நேரத்திலும் சுகம் காணாத உயிர்கள் எத்தனை?
விதையாய் விழுந்திருக்கலாம்!
வீண் மனிதராய் பிறந்துவிட்டோம்!!
2 comments:
அருமை!!
நன்றி, msr. :)
Post a Comment