எங்கே என் காதலிகள்?

Tuesday, November 28, 2006

1 comments  

பெண்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை காணவில்லை.

நான் பள்ளியில் படித்துவந்த காலங்களில் அவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் என் மனதில் ஆழமாக பதிந்தவர்கள். இப்பொழுது அவர்களில் ஒருவரையும் காணவில்லை. காட்டன் உடை உடுத்தி, வட்டமாய் பொட்டு வைத்து, கழுத்தில் சாதாரண மணி ஒன்று மட்டும் அணிந்தவர்கள். ஒரு ஜாடைக்கு சொல்லவேண்டும் என்றால், பாலு மகேந்திரா படங்களில் வரும் கதாநாயகிகள் போல. அளவோடு பேசி, அழகை சிரிப்பார்கள். அவர்கள் மனதின் தெளிவு கண்களில் தெரியும். அவர்களோடு பேச ஆவல் வரும். காதல் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே நான் காதலித்த இனம் அது.

ஏனோ இன்றைய பெண்கள் யாருக்கும் இந்த ரசனை இல்லை. ஏதேதோ பூசிக்கொண்டு, என்னென்னவோ மாட்டிக்கொண்டு, இவர்கள் ரசனை மாறிவிட்டது. Its been so long since I met a girl simple at heart and style!..yes, so long!! எங்கே என் காதலிகள்?!

தனிமை.

Saturday, November 25, 2006

0 comments  



தனிமையை நான் ரசிக்கிறேன்.
ஒருவன் அவனாக இருப்பது தனிமையில் தான்!

தனிமை எனக்கு புதிதல்ல. தனியாக இருப்பது எனக்கு சிரமமும் அல்ல. பள்ளி, கல்லூரி நாட்களில் கூட நான் தனியாக திரிந்த நேரங்களே அதிகம். அங்கெல்லாம் நண்பர்கள் உண்டு, ஆட்டம் உண்டு. ஆனால், அந்த கூட்டத்திலும் தண்ணீர் மீது எண்ணை போல நான் மட்டும் எனக்கு தனித்து நிற்பவனாகவே தோன்றும். இப்போது அலுவலகத்தில் இன்னும் மோசம்(?!) டீ கடை, கேன்டீன் இங்கெல்லாம் "என்ன தனியா வந்திருக்கீங்க?" என்று யாராவது கேட்கும் கேள்விக்கு ஒரு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக தருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. யாராவது அப்படி கேட்கும் போது, தனிமை என்பது பலருக்கும் வித்யாசமாக தோன்றுவதை எண்ணி என்னகுள் நானே சிரித்துக்கொள்வேன். அந்த நேரங்களில் "தனிமை கண்டதுண்டு, அதில் சாரம் இருக்குதய்யா!" என்ற பாரதியின் வரிகள் தவறாமல் நினைவிற்கு வரும்.

தனிமையில் தெளிய சிந்தனை உண்டு.
தன்னை தானே உணர்வதுண்டு.
அவசியயம் இருந்தால் அதரம் விரியட்டும்.