சாலை விளக்கு

Friday, February 8, 2008

 

வெள்ளிக்கிழமை அந்தி நேரம்.
அலுவல் முடித்து அமைதியான சாலையில்.

ஆயிரம் நினைவுகளை அசைபோட்டு
காலாற நடந்து வந்தேன்.

அங்கிருந்த பூங்கா ஒன்றில் காதலிலே தமை மறந்து
கண்மூடி திலைத்திருந்தனர் காதலர் இருவர்.

ஏதோ ஒன்று நினைவை தொட
என் உதடுகளில் சிறு புன்னகை.

காட்டில் வாழ்ந்த மனிதன் போல
கண்ட இடத்தில் காதலிக்கும் மக்கள்.

தவறொன்றும் இல்லை!
இது இவர்கள் கலாச்சாரம்!

சற்று தூரம் நடந்து வந்து சாலை கடக்க நின்றிருந்தேன்.
எனக்கெதிரே அந்தப்பக்கம் பெண்ணொருத்தி வந்து நின்றாள்.

அந்தியில் மலர்ந்த பூ போல அத்தனை பொலிவு அவள் முகத்தில்.
ஆடை என்ன, அணிகள் என்ன, அம்பு தொடுக்கும் விழிகள் என்ன!

நரேந்திரனே வியந்த பெண்கள்!
நான் வியந்ததில் வியப்பென்ன?

காத்திருந்த விளக்கெரிய சாலை கடக்க முற்பட்டேன்.
கன்னி மட்டும் நகரவில்லை, கண்கள் அவையும் திரும்பவில்லை!

புன்னகை செய்தாள் பூங்கொடியாள்! - அமெரிக்கர் வழக்கம் என்பதினால்
பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்!

கண்கள் பிரியும் முன்னே, புன்னகை சற்றும் குறையாமல்
செவ்விதழ்கள் விரித்து கேட்டாள் "ஹே! டூ யு வான ஹேங் அவுட்?!"

நண்பன் சொன்ன வேசியினை
இன்றே கண்டேன் முதல் முறையாய்!!

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
The Lady-Next-Door said...

Wow! Good one!! You have presented it very nicely. The symbolism is very subtle!!

தமிழ் புலவன் said...

Thank you, the-girl-next-door. :)