இப்ப தங்கி இருக்குற வீடு ஸ்டேஷன்லேருந்து ரொம்ப தூரம். அதனால தெனமும் வேலைக்கு போறப்ப வீட்டுக்கு போன் பண்ணி பேசிக்கிட்டே போவேன். அப்படி சமீபத்துல அம்மாகிட்ட பேசுனப்ப என் தம்பி இத சொன்னதா சொன்னாங்க. "அம்மா, சின்னவயசுல நானும் மகேசண்ணாவும் ஒன்னாத்தான் சுத்துவோம்ல? எங்க போனாலும் ரெண்டுபேரும் ஒன்னாத்தான் போவோம். ஒரு நாளு நான் அழுதுகிட்டு இருந்தேன். அப்ப அண்ண என்கிட்ட ஏன்டா அழுவுரன்னு கேட்டுச்சு. நான் முனியோட காத்தாடிய கல்லாங்கோல் போட்டு புடிச்சேன் அதனால என்ன அடிசிட்டான்னு சொன்னேன். ஒடனே அண்ண அவன்கூட மல்லுகட்டி சண்ட போட்டுச்சு...." இப்படி இன்னும் ரெண்டு மூணு விஷயம் சொன்னாங்க.
ஸ்டேஷன்வரைக்கும் பேசிக்கிட்டே போனேன். வண்டி வந்ததும் அம்மாகிட்ட BYE சொல்லிட்டு ஏறினேன். வழக்கம்போல வெள்ளக்காரங்க அளவுக்கு இந்தியர் கூட்டமு இருந்துச்சு. தம்பி சொன்னத நெனச்சி பாத்தேன். முனிகூட நான் சண்ட போட்டேனா? சாதாரணமா நான் எந்த விஷயத்தையும் மறக்க மாட்டேன். அதுவும் சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இருக்கு. இது மட்டும் நினைவுக்கு வரல.
முனி சேரியில இருந்த பையன். சேரி பேரு கூட....ம்ம்ம்..அங்........காக்காபள்ளம். கருப்பா இருப்பான். அவதாரம் படத்துல வர்ற Naser மாதிரி முடி வெச்சிருப்பான். காத்தாடி விடறதுல கில்லாடி. அவன்கூட தம்பிக்காக சண்டபோட்டேன்னு நெனக்குக் போது ஒரு சந்தோஷம் வந்துது.
அஞ்சு இல்ல ஆறாவது படிச்சிட்டு இருந்திருப்பேன். அப்பல்லாம் ரெண்டு பேரு வாழ்கையும் ஒன்னுதான். போடுற துணி கூட ஒரே மாதிரிதான் வாங்குவாங்க. ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தருக்கு பெரிய சந்தோஷமோ கவலையோ இருந்தது இல்ல. இப்ப, ஒலகத்துல அவன் ஒரு மூல நான் ஒரு மூல. வாரத்துக்கு ஒருதடவ இன்டர்நெட்ல அவன் மொகத்த பாக்குறதே அதிகம். வருஷம் ஓட ஓட வாழ்க எவ்வளோ மாறுது. என்னவிட பெரிய ஆளா ஆயிட்டான். அவனா எவளோ பிரச்சனைகள சமாளிக்கிறான். எனக்கு எதுவுமே தெரியாது. மனசு கனத்தது.
நான் எறங்க வேண்டிய ஸ்டேஷன் பேர announce பன்னாங்க. அப்பதான் இந்த ஒலகதுக்கே வந்தேன். அமெரிக்கர் வழக்கப்படி பொம்பளைங்களுக்கு வழிவிட்டு அப்புறமா எறங்குனேன். ஸ்டேஷனுக்கு வெளிய வந்து மணியபாத்தேன். 9:15 ஆச்சு. நேத்து பாதியில விட்ட வேலஒன்னு ஞாபகத்துக்கு வந்துது. ஆபிஸ நோக்கி வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.....
0 comments:
Post a Comment