தனிமையை நான் ரசிக்கிறேன்.
ஒருவன் அவனாக இருப்பது தனிமையில் தான்!
தனிமை எனக்கு புதிதல்ல. தனியாக இருப்பது எனக்கு சிரமமும் அல்ல. பள்ளி, கல்லூரி நாட்களில் கூட நான் தனியாக திரிந்த நேரங்களே அதிகம். அங்கெல்லாம் நண்பர்கள் உண்டு, ஆட்டம் உண்டு. ஆனால், அந்த கூட்டத்திலும் தண்ணீர் மீது எண்ணை போல நான் மட்டும் எனக்கு தனித்து நிற்பவனாகவே தோன்றும். இப்போது அலுவலகத்தில் இன்னும் மோசம்(?!) டீ கடை, கேன்டீன் இங்கெல்லாம் "என்ன தனியா வந்திருக்கீங்க?" என்று யாராவது கேட்கும் கேள்விக்கு ஒரு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக தருவது தினசரி வாடிக்கையாகி விட்டது. யாராவது அப்படி கேட்கும் போது, தனிமை என்பது பலருக்கும் வித்யாசமாக தோன்றுவதை எண்ணி என்னகுள் நானே சிரித்துக்கொள்வேன். அந்த நேரங்களில் "தனிமை கண்டதுண்டு, அதில் சாரம் இருக்குதய்யா!" என்ற பாரதியின் வரிகள் தவறாமல் நினைவிற்கு வரும்.
தனிமையில் தெளிய சிந்தனை உண்டு.
தன்னை தானே உணர்வதுண்டு.
அவசியயம் இருந்தால் அதரம் விரியட்டும்.
0 comments:
Post a Comment